234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுகம் – காரைக்குடியில் சீமான் போட்டி!

சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்துள்ளார்.

திருச்சி மாவட்டம், ஆலம்பட்டிபுதூரில் நேற்று மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார். அப்போது, “தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். 117 பெண், 117 ஆண் வேட்பாளர்கள் என மொத்தம் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்தார். தொடர்ந்து பேசியவர், எங்களது அரசியல் தமிழ் தேச அரசியல். எங்களது கனவு ஆள் மாற்றம், ஆட்சி மாற்றம் அல்ல. ஆட்சிமுறை மாற்றம். அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றம்.

பசி, பஞ்சம், கொலை, கொள்ளை, பெண்ணடிமைத்தனம், ஜாதி, மதம் அற்ற, மது, போதை அற்ற, புதிய தேசம் செய்வோம். கல்வி, கல்விக்கேற்ற வேலை, அதற்கேற்ற சம்பளம், அதற்கேற்ற வாழ்வு. அதுவே எங்களது கனவு. இலவசத்தை ஒழிக்கும் விழிப்புணா்வுதான் மாற்றத்துக்கான முதல்படி. இலவசத்தால் இழக்கும் பணத்தை எங்கிருந்து எடுப்பாா்கள் என்ற கேள்வி எழுமானால் விழிப்புணா்வு ஏற்பட்டுவிடும். மொத்தம் ரூ. 10 லட்சம் கோடி கடன். ஒரு குடும்ப அட்டைக்கு லட்சம் கடன் உள்ளது. இதைச் சிந்திக்கத் தொடங்கிவிட்டால், மாற்றத்துக்கான அரசியல் பிறந்துவிடும்.

எங்களது ஆட்சியில் தமிழ் என்ற ஒரு மொழி மட்டுமே. இலவசம் வழங்காமல், ஆகச் சிறந்த கல்வி, அனைவருக்கும் சமமான மருத்துவம், தடையற்ற மின்சாரம், வேலையே இல்லாத மனிதா், தூய குடிநீா் வழங்குவோம். ஐந்தாயிரத்தை வாங்குகிற என் அம்மாக்கள் கைகளில் 2 லட்சம் ரூபாய் கடன் இருக்கிறது என்பதை அறிவுச் சமூகம் அறியணும். இதை சிந்திக்க தொடங்கிவிட்டால் மாற்றத்திற்கான அரசியல் தொடங்கிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.