ஒரே நாளில் 2,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 2,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்த…

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 2,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் படிப்படியாக கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கி இருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டின் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அடங்கிய விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுவருகிறது. அதன்படி, இன்று ஒரே நாளில் 2,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 17,228 ஆக உயர்ந்துள்ளது.

அண்மைச் செய்தி: ‘மாணவி உயிரிழப்பு
சிபிஎம் மாநிலச் செயலாளர் முதலமைச்சருக்குக் கடிதம்!’

கொரோனா தொற்றால் 1 உயிரிழப்பும், 2,458 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். சென்னையில் 596 பேருக்கும், செங்கல்பட்டில் 354 பேருக்கும், கோவையில், 164 பேருக்கும், திருச்சியில் 66 பேருக்கும், திருவள்ளூரில் 114 பேருக்கும் என ஒட்டுமொத்தமாக இன்று 2,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.