விருதுநகர் மாவட்டத்தில் நாளை அனைத்து தனியார்ப் பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் நாளை அனைத்து தனியார்ப் பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. எனவே, மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகத்தின் அறிவுறுத்தலின்படி, விருதுநகர் மாவட்டத்தில் நாளை அனைத்து நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், தனியார் சுயநிதி பள்ளிகள், மற்றும் சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.சி., மற்றும் அனைத்து தனியார்ப் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் எனத் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘ஒரே நாளில் 2,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!’
மேலும், இந்த உத்தரவை அனைத்து தனியார்ப் பள்ளிகளும் கடைப்பிடித்து, அனைத்து பள்ளிகளும் செயல்படவேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.