முக்கியச் செய்திகள் தமிழகம்

மாணவி தற்கொலை; சிபிஎம் மாநிலச் செயலாளர் முதலமைச்சருக்குக் கடிதம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார்ப் பள்ளி மாணவி விடுதியில் மரணத்தில் நியாயமான முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கண்டறிந்து உரியத் தண்டனை வழங்க வேண்டும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில், கடலூர் மாவட்டம், பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார்ப் பள்ளி விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 13.07.2022 அன்று மாணவி ஸ்ரீமதி விடுதியில் மர்மமான முறையில் இறந்துள்ளார் என்கிற செய்தி அனைவரையும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது எனத் தெரிவித்துள்ள அவர்,

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது இயற்கையான மரணம் இல்லை என்பதாலும், மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாலும் இதுகுறித்து காவல்துறை தீர விசாரிக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் தொடர்ந்து கோரி வரும் நிலையில், மாணவியின் உறவினர்கள், மாணவர்கள், பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடி வருவதாகத் தெரிவித்துள்ள அவர், போராட்டக்காரர்களை காவல்துறை தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தித் தடுக்க முயற்சித்து வருகிறது. தமிழ்நாடு அரசு இதை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்க்காமல் ஏற்கனவே அப்பள்ளியில் இதுபோன்று மாணவிகள் மரணமடைந்துள்ளதும், தற்போது இந்த மாணவி மர்மமான முறையில் இறந்துள்ளதும் அங்குள்ள மக்கள் மத்தியில் மிகுந்த பதற்றம் ஏற்பட்டுள்ளதால் இத்தகைய விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முதலமைச்சர் கள்ளக்குறிச்சி பிரச்சனையில் உடனடியாக தலையிட்டதோடு, மாணவியின் மரணத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும், அத்துடன் உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் உடனடியாக கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘‘தி லெஜன்ட்’ கன்னட ட்ரைலர் வெளியானது!’

மரணமடைந்த மாணவியின் பெற்றோர்களைப் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தான் நேரடியாகச் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்ததாகக் கூறியுள்ள அவர், இந்த தனியார்ப் பள்ளி விடுதியில் ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிய வருவதாகவும், மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பொதுமக்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் போராட்டம் நடத்தி வருவதாகவும், அங்கு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களையொட்டி சின்ன சேலம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் மிகுந்த வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த வன்முறைச் சம்பவங்களில் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவானவர்கள் ஈடுபட்டார்களா என்பதையும் தமிழ்நாடு அரசு விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வன்முறைச் சம்பவங்களைக் காரணம் காட்டி அப்பாவி பொதுமக்கள் மீதும், மாணவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ள அவர், மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதால் அவர்களது எதிர்காலம் பாதிக்கும் என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், மாணவியின் மரணத்தில் நியாயமான முறையில் விசாரணை நடத்தி மாணவியின் மரணத்திற்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட தாங்கள் உத்தரவிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மூத்த நிர்வாகிகள் சமாதான முயற்சி- அதிமுகவில் அமைதி திரும்புமா?

Web Editor

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய பட அப்டேட்; உற்சாகத்தில் ரசிகர்கள்!

G SaravanaKumar

காசு, பணம், துட்டு… புழக்கத்தில் குறைகிறதா ரூ.2000?

Halley Karthik