முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

22 பேர் உயிரைக் குடித்த கள்ளச்சாராயம்: 28 பேர் சீரியஸ்!

உத்தரபிரதேச மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. 28 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் அருகே கார்சியா பகுதியில் உள்ள லோதா, கைர், ஜாவான் ஆகிய பகுதிகளில் அனில் சவுத்ரி என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இதைக் குடித்த 7 பேர் திடீரென உயிரிழந்தனர். இதையடுத்து லோதா, கைர், ஜாவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கள்ளச்சாரயம் குடித்த 15 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த சம்பவத்தில் இறப்பு எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

மயங்கிய நிலையில் இருந்த 28 பேர் அலிகாரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை சீரியஸாக இருக்கிறது. இதுபற்றி வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கள்ளச்சாராயம் விற்ற அனில் சவுத்ரி உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர். 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனில் சவுத்ரியின் கூட்டாளிகளான ரிஷி சர்மா, விபின் யாதவ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement:

Related posts

தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

Ezhilarasan

“பொள்ளாச்சி விவகாரத்திற்கு திமுக ஆட்சியில் கடும் தண்டனை வழங்கப்படும்”: மு.க.ஸ்டாலின்

Karthick

நெல்லையில் நிலநடுக்கம்!

Karthick