அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
”2004 டிசம்பர் 26… கடல் அமைதியாகத் தோன்றிய ஒரு காலை, ஒரு நொடியிலே ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகளை, புன்னகைகளை, வாழ்க்கைகளை பறித்துக் கொண்ட மறக்க முடியாத, இப்பதிவிடும் இந்த இரவு நேரத்தைப் போன்றதொரு இருளை தமிழகம் உணர்ந்த துயர்மிகு நாள்.
தமிழகத்தின் கரையோர கிராமங்களில் தாயின் கையை விட்டுப் பிரிந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த தாய்மார்கள், வாழ்வாதாரத்தை இழந்த மீனவர் குடும்பங்கள்- அந்த வலி இன்றும் கடல் அலைகளின் சத்தத்திலே ஒலித்துக்கொண்டே இருக்கிறது. எவ்விடர் வரினும் எதிர்கொள்ளும் அம்மாவின் அரசு, நிவாரணப் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, இதையும் எதிர்கொண்டது.
இயற்கையின் கோரத் தாண்டவத்தால் உயிரிழந்த ஒவ்வொரு ஆன்மாவுக்கும் எனது பணிவான அஞ்சலி. அவர்களின் நினைவுகள், எதிர்காலத்தில் நாம் இன்னும் பாதுகாப்பான, மனிதநேயமிக்க சமூகமாக மாற நம்மை வழிநடத்தும் விளக்காக இருக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.







