முக்கியச் செய்திகள் சினிமா

‘குஷி’யான 21 ஆண்டு!

‘குஷி’ என்று சொன்னாலே விஜய் மற்றும் ஜோதிகாவின் அந்த கொஞ்சலான நடிப்பே நம் கண்முன்னே வந்து செல்லும். தற்போது இந்த திரைப்படம்  வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. குஷி படத்திற்கு இன்றும் ரசிகர் பட்டாளம் உண்டு.

எஸ்.ஜே. சூர்யா எழுதி, இயக்கிய திரைப்படம் குஷி. தேவாவின் துள்ளலான இசையில் இப்படம் 2000ல் மே மாதம் 19ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விவேக்கின் நகைச்சுவை சிரிக்கவும் அதே போல் நம்மை சிந்திக்க வைக்கவும் தவறவில்லை. மேலும் இப்படத்தில் மும்தாஜ் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். எஸ்.ஜே .சூர்யா இயக்கிய இரண்டாவது திரைப்படமாக இப்படம் இருந்தது. தன் இரண்டாவது படத்திலேயே ரசிகர்களின் ரசனை அறிந்து இயக்கியிருந்தார்.

விஜய்யின் இளமை துள்ளும் நடிப்பும் , ஜோதிகாவிற்கும் அவருக்குமான ஈகோ மோதலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. காதல் காட்சிகள், நடனம், வசனம், கொஞ்சலான நடிப்பு என்று ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார்.

இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்த ஜோதிகா அப்போது திரையுலகின் புது வரவு, தனது கொஞ்சலான மற்றும் துறுதுறுப்பான நடிப்பில் ரசிகர்கள் மனதில் நங்கூரமாக இடம் பிடித்தார். இப்படத்தின் சிறப்பு வேடத்தில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி ‘மெக்கோரினா’ பாடலுக்கு அசத்தல் நடமாடி இளசுகளின் உள்ளங்களை கவர்ந்தார். 

தேவாவின் இசையில் ஒவ்வொரு பாடலும் அப்போது சூப்பர் ஹிட், இன்று வரை அந்த பாடலுக்கு செவிசாய்க்காதவர்கள் இல்லை. நடிப்பு,நடனம்,பாடல்,வசனம் என்று ஆரம்பம் முதல் படத்தின் முடிவு வரை  அழகான எதார்த்த காதலின் உணர்வுகளில் நம்மை மிதக்க செய்திருப்பார் எஸ்.ஜே. சூர்யா. 

‘குஷி’ வெளியாகி 21 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் ரசிகர்களின் மனதில் குஷியாகவே பதிந்திருக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

பிரபாஸின் ’சலார்’ படத்தில் பிருத்விராஜ்?

Halley karthi

போயிங் நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஒப்பந்தம்: முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்து

Ezhilarasan

“ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்”- விமர்சனம்

Ezhilarasan