கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியில் அமைந்துள்ள தனியார்
நிறுவனத்திற்கு, 25 பணியிடங்களுக்கு 2000 இளைஞர்கள் குவிந்ததால்
பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியில் அமைந்துள்ள சிப்காட்டில்,
ஓலா என்ற காலணி தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் உள்ளன. புதிய நிறுவனங்களின் பல கட்டமைகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் , போச்சம்பள்ளி சிப்காட்டில் புதியதாக கட்டப்பட்ட நிறுவனத்திற்கு
ஆட்கள் தேவை என நோட்டீஸ் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது.
இதனை அறிந்த சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் சுமார்
2000-க்கும் மேற்பட்டோர், சிப்காட் வளாகத்தில் குவிந்தனர். ஜெம் கற்கள்
தயாரிக்கும் இந்நிறுவனத்திற்கு 25 நபர்கள் மட்டுமே பணிக்கு ஆட்கள் தேவை
என்ற போதிலும், 2000த்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் அங்கு குவிந்ததால்
பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், வந்திருந்த அனைத்து இளைஞர்களிடமும் ரெசியூம் பெறப்பட்டு, பின்னர்
அழைக்கப்படுவர் என தெரிவித்தனர். இதனால், இளைஞரகள் தாங்கள் கொண்டு
வந்திருந்த ரெசியூமை கொடுத்துவிட்டு சென்றனர்.
—–கு.பாலமுருகன்







