குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளை கொண்ட இமாசச்சல சட்டசபைக்கு கடந்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோல் குஜராத்தில் 182 தொகுதிகளுக்கான சட்டச்சபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5ம் தேதி 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.
காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் குஜராத்தில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. குஜராத் முதலமைச்சர் வேட்பாளரான பூபேந்திர படேல் கட்லோடியா தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இதேபோல் இமாச்சலில் பாஜக முதலமைச்சர் வேட்பாளர் ஜெயராம் தாகூர் முன்னிலையில் உள்ளார். இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், குஜராத் மற்றும் இமாச்சல் தேர்தல் முடிவுகள் குறித்து டெல்லியில் பாஜக மூத் நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். குஜராத்தில் பாஜக இமாலய வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு டெல்லி பாஜக தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லி பாஜக அலுவலகத்தில் வைத்து பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் உரையாற்றுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.