விசாரணை கைதி கொலை வழக்கில் 2 காவலர்கள் கைது

விக்னேஷ் மரண வழக்கு கொலைவழக்காக மாற்றப்பட்ட நிலையில், 2 காவலர்கள் கைது செய்யப்படுள்ளனர். சட்டப்பேரவையில் நேற்று நேரம் இல்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக சிறப்பு…

விக்னேஷ் மரண வழக்கு கொலைவழக்காக மாற்றப்பட்ட நிலையில், 2 காவலர்கள் கைது செய்யப்படுள்ளனர்.

சட்டப்பேரவையில் நேற்று நேரம் இல்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், விக்னேஷ் மரணத்தில் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் உடலில் 13 இடங்களில் காயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக தலையில் பலத்த காயம் இருந்தது தெரியவந்துள்ளது என தெரிவித்தார். மேலும், முதலமைச்சரின் தகவலும், பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ள தகவல்களும் முரண்பட்டுள்ளது என குற்றம்சாட்டினார். இந்த வழக்கு முறையாக நடைபெற சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அண்மைச் செய்தி: ‘இது மக்களின் அரசு; மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசு; மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுகின்ற அரசு – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்’

இதற்கு பதிலளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விசாரணை கைதி விக்னேஷ் மரணத்தில் அனைத்து நடவடிக்கையையும் அரசு முறையாக மேற்கொண்டு வருவதாகவும், விக்னேஷ் மரண வழக்கு கொலைவழக்காக மாற்றப்பட்டு, காவலர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், விசாரணை கைதியாக விக்னேஷ் கைதுசெய்யப்பட்ட அன்று விசாரணையில் ஈடுபட்ட தலைமை செயலக காலனி நிலைய எழுத்தர் முனாஃப் மற்றும் காவலர் பவுன்ராஜ் இருவரும் தற்போது கைதுசெய்யப்படுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.