இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிரகடனம்

இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் அவசரநிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் அன்னியச் செலாவணி பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியை…

இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் அவசரநிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் அன்னியச் செலாவணி பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக, அதிபர் கோத்தபய ராஜபக்சவும், பிரதமர் மகிந்த ராஜபக்சவும் பதவி விலக வலியுறுத்தி, அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை அரசுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் நேற்று நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அந்நாட்டு மக்கள் முழு ஆதரவு அளித்தனர். தொடர்ந்து நாடாளுமன்றம் முன்பாக ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் மற்றும் மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருவதையடுத்து, நேற்று நள்ளிரவு முதல் இலங்கையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பிரகடணத்தில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கையொப்பமிட்டுள்ளார். அதில், இலங்கையில் அவசரகால நிலை நிலவுவதால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நாட்டில் அமைதியை ஏற்படுத்தவும், நாட்டு மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை வழங்கவும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.