ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்து பொருட்களை ஆந்திராவிலிருந்து ரயிலில் மூலம் கடத்தி கொண்டுவரப்பட்டு, சென்னை உட்படப் புறநகர்ப் பகுதிகளில் விற்பனை நடைபெற்று வருகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் கஞ்சா விற்பனையைத் தடுக்க சிறப்புக் காவலர்களை நியமித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலை எல்லைக்கு உட்படப் பகுதியில் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப் படை காவல்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து சுதந்திர தின பூங்கா அருகே உள்ள ரவுண்டானா அருகில் சந்தேகத்துக்கிட்டமாக நின்று கொண்டிருந்த ஒரு பெண் உட்பட இரண்டு நபர்களும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் முன்னுக்கு முரணாகப் பதில் அளிக்கவே அவர்கள் மறைத்து வைத்திருந்த பையைச் சோதனை செய்த போது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பதைத் தனிப் படை போலீசார் கண்டுபிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சட்ட விரோதமாக ரயில் மூலம் ஆந்திராவிலிருந்து சென்னைக்குக் கஞ்சா கடத்தி வந்து சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் சிறு சிறு பொட்டலங்களாக மாற்றி விற்பனை மேற்கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது.
அண்மைச் செய்தி: ‘அமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கு: மன்னிப்பு கோர உத்தரவு!’
இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (வயது 38) கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஷீபாஜோதி (வயது 31) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 9 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மேஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.








