அதிகாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ போக்குவரத்து ஊழியர்கள்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் பிரச்சினையில் உடனடியாக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சிஐடியூ போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகராட்சி ஓட்டுநர் பயிற்சி மையத்தில் நேற்று போக்குவரத்துத்துறை…

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் பிரச்சினையில் உடனடியாக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சிஐடியூ போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகராட்சி ஓட்டுநர் பயிற்சி மையத்தில் நேற்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் போக்குவரத்து தொழிலாளர்களின் 14வது ஊதிய ஒப்பந்தத்தின் ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் 66 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 2-வது நாளாக நீடித்த 7-ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, 5 சதவீத ஊதிய உயர்வுடன், பேமெட்ரிக்ஸ் முறையில் ஊதியம் வழங்க உடன்பாடு எட்டப்பட்டது.

இருப்பினும், சிஐடியூ, ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கங்களைத் தவிர மற்ற அனைத்து சங்கங்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மேலும் பேச்சுவார்த்தை காலத்தில் மூன்றிலிருந்து நான்காண்டுகளாக உயர்த்த முடிவிற்குத் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், பெரும்பான்மை சங்கங்களின் ஆதரவுடன் ஊதிய ஒப்பந்தம் நேற்று இறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ‘ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த பெண் உட்பட 2 பேர் கைது!’

இருப்பினும் அரசின் இந்த முடிவுக்கு, எதிர்ப்பு தெரிவித்து CITU , AITUC தொழிற்சங்கத்தினர் ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், அதிகாலை முதல் சென்னை வடபழனி பேருந்து பேருந்து டிப்போ முன்பு, போக்குவரத்து ஓய்வூதியர்கள் பிரச்சினையில் உடனடியாக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும், ஊதிய ஒப்பந்த காலம் 4 ஆண்டுகள் என மாற்றியதைக் கண்டித்தும் சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.