சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகள்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதியதாக இரண்டு நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடத்தில் தற்போது 16 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களாக உள்ள…

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதியதாக இரண்டு நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடத்தில் தற்போது 16 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களாக உள்ள 6 பேரை நீதிபதிகளாக நியமிப்பதற்கு குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்ற கொலிஜியம் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி பரிந்துரைத்தது.

இந்நிலையில், 2 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். வழக்கறிஞர்களாக பணியாற்றி வந்த மாலா மற்றும் சவுந்தர் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்..

புதியதாக இரண்டு நீதிபதிகள் நியமிக்கப்பட்டதன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது. நீதிபதி காலியிடங்கள் 14ஆகக் குறைந்துள்ள நிலையில், பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.