வெளிநாடுவாழ் தமிழர்களுக்காக நலவாரியம் அமைக்க மசோதா

தமிழ்நாட்டுக்கு வெளியே வாழும் தமிழர்களின் நலனுக்காக வாரியம் அமைப்பது தொடர்பான சட்டமசோதா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நிறைவேறியது.   தமிழ்நாடு அரசின் 2022 – 2023ம் ஆண்டுகான பட்ஜெட் கடந்த 18ம் தேதி சட்டமன்றத்தில்…

தமிழ்நாட்டுக்கு வெளியே வாழும் தமிழர்களின் நலனுக்காக வாரியம் அமைப்பது தொடர்பான சட்டமசோதா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நிறைவேறியது.

 

தமிழ்நாடு அரசின் 2022 – 2023ம் ஆண்டுகான பட்ஜெட் கடந்த 18ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான பொது விவாதம் சட்டப்பேரவையில் கடந்த 3 நாட்களாக நடந்து வந்தது. இந்த நிலையில் 4ம் நாளாக சட்டப்பேரவை பொது விவாதம் நடந்தது.

இதில் பங்கேற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான்,  2011ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாட்டுக்கு வெளியே வாழும் தமிழர்கள் நலச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாட்டை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்களின் நலனை உறுதி செய்யவும், ஓய்வூதியம் உள்ளிட்ட பிற பலன்களை வழங்குவதற்கான நிவாரணத்தை அளிக்கவும், நலவாரியம் ஒன்றை அமைக்க 2011ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் வாழாத தமிழர்களின் நலனுக்காக கூட்டுறவு சங்கங்கள் அல்லது வேறு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாட்டுக்கு வெளியே வாழும் தமிழர்கள் நலச் சட்டம் உருவாக்கப்பட்டது.

தற்போது சங்கமாக இருந்ததை வாரியமாக மாற்றியுள்ளதால் அதிலுள்ள பதவிகளையும் அதற்கேற்ற வகையில், தலைவர், உறுப்பினர் என்று மாற்றுவதாகவும்,
வாரியத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை 13ல் இருந்து 15ஆக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வசிக்காத தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நலன் ஆணையரை அந்த வாரியத்தின் உறுப்பினர் செயலாளராக பதவி வகிக்கவும் அரசு முன்மொழிந்துள்ளது. அதன்படி இந்த மாற்றங்களை மேற்கொள்வதற்கு வசதியாக இந்த சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.