பாலக்கோட்டில் 2 மாதங்களுக்கு பிறகு தக்காளி விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி!

பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவாட்டரப் பகுதிகளில் 2 மாதங்களுக்கு பிறகு தக்காளி விலை அதிகரித்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பெல்ரம்படி, எர்ரணஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிக…

பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவாட்டரப் பகுதிகளில் 2 மாதங்களுக்கு பிறகு தக்காளி விலை அதிகரித்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பெல்ரம்படி, எர்ரணஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு தக்காளி பயிரிடும் நிலையில், பாலக்கோடு பகுதியில் செயல்படும் தக்காளி சந்தையில் நாள்தோறும் வெளி மாவட்டங்களுக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக விலை சரிந்து 5 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்த நிலையில், தற்போது கோடை மழையால் மழைநீர் தேங்கி தக்காளி பயிர்கள் அழுகி மற்றும் ஆலங்கட்டி விழுந்து தக்காளி செடியிலே பழங்கள் வெடித்து  அழுகுவதால் மகசூல் பாதிக்கப்பட்டது. இதனால் தக்காளி  வரத்து சந்தையில் குறைந்தது. இதையடுத்து  இரண்டு மாதங்களுக்கு பிறகு விலை சற்று அதிகரித்து கிலோ 12ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வரும் வாரங்களில் விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

—-ரூபி.காமராஜ்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.