ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்காம் மாவட்டத்தில் இன்று காலை இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்பு படைவீரர்கள் சுட்டுக் கொன்றனர். பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து இந்த பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பத்காம் மாவட்டத்தில் இன்று அதிகாலை பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் நின்ற வாகனத்தின் மீது தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் தாக்கினர். தீவிரவாதிகள் தரப்பிலிருந்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. பின்பு இந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த இரண்டு தீவிரவாதிகளின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. அர்பாஸ் மிர் மற்றும் ஷாஹித் ஷேக் என்ற இரண்டு தீவிரவாதிகள் புல்வாமா தாக்குதலில் தொடர்புடையவர்கள். இந்த இரண்டு தீவிரவாதிகள் லக்ஷர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்த ஆயுதங்களும் காவல்துறை மீட்டுள்ளது.







