2 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தன : சுகாதாரத்துறை

மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், கோவாக்சின்…

மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 2 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தன. இதனை, சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள DMS வளாகத்தில் செயல்படும் மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு தடுப்பு மருந்துகள் கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில், மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பு மருந்துகள் 150 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.