2025 ஆண்டுக்குள் 2 லட்சம் கிலோமீட்டர் சாலைகள் மேம்படுத்தப்படும்; நிதின் கட்கரி

2025ம் ஆண்டுக்குள் 2 லட்சம் கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் தரம் உயர்ந்ததாக மேம்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி…

2025ம் ஆண்டுக்குள் 2 லட்சம் கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் தரம் உயர்ந்ததாக மேம்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வரும் 2025ம் ஆண்டுக்குள் 2 லட்சம் கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் தரம் உயர்ந்ததாக மேம்படுத்துவதற்கான வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர், “22 பசுமை வழி தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்காக பணிகளை மேற்கொள்வதன் மூலம் சாலைப் போக்குவரத்தில் பயண நேரத்தை வெகுவாக குறைக்க முடியும்.

நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய உதவும். சாலைகளை மேம்படுத்துவதன் மூலம் நேரத்தை குறைப்பதோடு, பெட்ரோல், டீசல் பயன்பாட்டையும் குறைக்க முடியும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இத்தகைய முன்னேற்றங்கள் அவசியமானது. மேலும் சாலை வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் நமது 10 சதவீதத்திற்கும் உள்ளான டிஜிபி இலக்கை அடைய முடியும். தற்போது நமது நாட்டின் டிஜிபி சதவிகிதம் 14-16% என்ற விகிதத்தில் உள்ளது. ஆனால் அண்டை நாடான சீனா 8-10% என்ற நிலையிலும் பல ஐரோப்பிய நாடுகள் 12% என்ற விகிதத்திலும் இருந்துவருகிறது. நாட்டின் டிஜிபி சதவிகிதத்தை 10-12லிருந்து குறைப்பதன் மூலம் நமது சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் நாம் வளர்ந்த நாடாக மாற முடியும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.