தெற்கு அந்தமான் கடற்பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
சென்னையில், இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்ட அவர், படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தெற்கு அந்தமான் கடல்பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த மண்டலமாக வலுபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக, தெற்கு அந்தமான் கடல்பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில், சூறாவளி காற்று வீசும் என்றும் அவர் கூறினார். மேலும், அரபிக்கடல் பகுதியில் இன்று மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.