படிக்கட்டு சுவர் இடிந்து விழுந்து கட்டுமான தொழிலாளிகள் இருவர் உயிரிழப்பு!

ராமநாதபுரத்தில் கட்டுமான பணியின் போது, சுவர் இடிந்து விழுந்து கட்டுமான தொழிலாளிகள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் அரசு மருத்துவருக்கு சொந்தமான வீட்டின் கட்டிட வேலைபாடுகள் கடந்த சில மாதங்களாக…

ராமநாதபுரத்தில் கட்டுமான பணியின் போது, சுவர் இடிந்து விழுந்து கட்டுமான தொழிலாளிகள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் அரசு மருத்துவருக்கு சொந்தமான வீட்டின் கட்டிட வேலைபாடுகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

நேற்று வீட்டின் உட்புற படிக்கட்டு கட்டப்பட்டு வந்த நிலையில், படியின் கீழே
நின்று கொண்டு கடப்பாரையால் சுவரை உடைக்கும் பணி செய்தனர். அப்பொழுது அச்சுந்தன்வயல் பகுதியை சேர்ந்த மாதவன் மற்றும் வன்னிக்குடி பகுதியை சேர்ந்த சௌந்தரபாண்டியன் இருவர் மீது திடீரென அந்த படிக்கட்டும் 10 அடி பக்கவாட்டு சுவரும் சரிந்து மேலே விழுந்தது.

சுவர் இடிந்து விழுந்ததால் சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் நசுங்கி உயிர் இழந்தனர். அருகாமையில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்று, முடியாத சூழ்நிலையில் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கேணிக்கரை போலீசார் உடனே விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  கட்டுமான தொழிலாளர்கள் தலைக்கவசம் அணியாமல் கட்டிடத் தொழில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.