பக்ரீத் பெருநாள்: தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகை…

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறாப்பு தொழுகை நடத்தினர். தியாகத் திருநாள் அல்லது ஹஜ் பெருநாள், உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைத் தூதர்…

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறாப்பு தொழுகை நடத்தினர்.

தியாகத் திருநாள் அல்லது ஹஜ் பெருநாள், உலக அளவில் இஸ்லாமியர்களால்
கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைத் தூதர் இப்ராகீம் நபியின்
தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின்
பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.

இதனை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். குறிப்பாகக் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப்
பகுதிகளில் ஆண்கள் பெண்கள் என 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர்.

குறிப்பாகத் திருநெல்வேலி மேலப்பாளையத்தில் மசூதிகள், சாலைகள், திடல்கள் என பல
இடங்களில் சிறப்பு தொழுகைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு நடத்தப்பட்ட சிறப்பு தொழுகைகளில் புத்தாடைகளை அணிந்து இஸ்லாமியர்கள்
தங்கள் குடும்பத்தினருடன் தொழுகை ஈடுபட்டனர்.

அதை தொடர்ந்து, தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9இடங்களில் பக்ரீத் பெருநாள் தொழுகை திடல்களில் நடத்தப்பட்டது. இதில் பிரமாண்டமாகக் காயிதே மில்லத் திடல் முழுவதும் நிறைந்தது அதன் பின்னர்
அருகே உள்ள பெரியதொரு புதுத்தெரு மணிக்கூண்டு ஆகிய இடங்களிலும் தொழுதனர்.

இதில் அதிகாலை 6 மணி முதலே இஸ்லாமியர்கள் ஆண்களும் பெண்களும் மற்றும் சிறுவர் சிறுமியர்களும் குளித்து விட்டு நறுமணம் பூசி தொழுகைக்காகக் காயிதே மில்லத்
திடல் நோக்கி வரத் தொடங்கினர் மாநில செயலாளர் செங்கை பைசல் தலைமை ஏற்று
பெருநாள் சிறப்பு தொழுகையை நடத்தினார்.

மேலும்,  புதுச்சேரி கடற்கரை சாலை மற்றும் நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை நடத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.