அரியலூரில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம், கோடாலிகருப்பூர் கிராமத்தை சேர்ந்த செல்வகணபதி என்ற இளைஞர், ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த சிறுமியை ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும், செல்போனில் புகைப்படங்கள் வைத்து கொண்டு சிறுமியின் பெற்றோரை மிரட்டியதாக தெரிகிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் செல்வகணபதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோன்று, மேலப்பழூர் கிராமத்தில் சிசிடிவி சரி செய்வதற்காக வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயன் என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.
இது தொடர்பான புகாரில் அவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், மாவட்ட எஸ்பியின் பரிந்துரையின் பேரில் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க ஆட்சியர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.