மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதி தூக்கிட்டு உயிரிழப்பு !

மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். மதுரை திடீர் நகர் அலாவுதீன் தோப்பை சேர்ந்த நாசர் என்பவர் 2003ஆம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில்…

மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்
கொண்டார்.

மதுரை திடீர் நகர் அலாவுதீன் தோப்பை சேர்ந்த நாசர் என்பவர் 2003ஆம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்தார். இந்நிலையில் கைதிகள் தங்கியிருந்த அறையில் நாசர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டாத கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த போலீசார் நாசரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர். உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply