19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முந்தைய உலக சாதனையை முறியடித்து இந்தியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளில், ஆடவர் லைட் வெயிட் இரட்டையர் துடுப்புப் படகுப் போட்டியில், இந்தியாவின் அர்ஜுன்லால் ஜாட், அரவிந்த் சிங் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எட்டு பேர் பங்கேற்கும் துடுப்புப் படகுப் போட்டியில் நீரஜ், நரேஷ் கல்வானியா, நீத்திஷ் குமார், சரண்ஜீத் சிங், ஜஸ்விந்தர் சிங், பீம்சிங், புனீத் குமார், ஆசிஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
இதையும் படியுங்கள் : நிபா வைரஸ் பரவல் இல்லை – கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தது கோழிக்கோடு நிர்வாகம்!
மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிப் பிரிவில் இந்தியாவின் ரமிதா, மெகுலி கோஷ், ஆஷி சோக்சி ஆகியோர் அடங்கிய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
இந்நிலையில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய ஆடவர் அணி சீனாவை வென்று நடப்பு தொடரில் முதல் தங்கப்பதக்கத்தை முத்தமிட்டது. மேலும், இப்போட்டியில் முந்தைய உலக சாதனையையும் இந்தியா முறியடித்துள்ளது. பதக்கப்பட்டியலில் இந்தியா ஒரு தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கத்துடன் 6வது இடத்தில் உள்ளது.