முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தமிழ்நாட்டில் புதிதாக 1,702 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 1,702 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவ தும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 542 பேருக்கு கொரோனா பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,702 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனாவால் 25 லட்சத்து 95 ஆயிரத்து 935 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில், 1,892 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25 லட்சத்து 41 ஆயிரத்து 432 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 639 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 193 பேருக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை
பெற்றுவந்த 184 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் 198 பேருக்கு தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 147 பேருக்கும் சேலத்தில் 94 பேருக்கும் தஞ்சாவூரில்
112 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றார்

Ezhilarasan

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனு தள்ளுபடி

Ezhilarasan

தொடர்மழை காரணமாக நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்… விவசாயிகள் வேதனை!

Nandhakumar