முக்கியச் செய்திகள் உலகம்

புதுசால்ல இருக்கு.. மைக்கேல் ஜாக்சன் ஆவியுடன் திருமணமாம்..‘மர்லின் மன்றோ’மறுபிறவி பரபரப்பு!

மைக்கேல் ஜாக்சன் ஆவியுடன் திருமணம் செய்துகொண்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண் கத்லீன் ராபர்ட்ஸ் (Kathleen Roberts). இவர் கட்டுரை ஒன்றில் எழுதியிருக்கும் தகவல்கள் அமெரிக்காவில் அதிரிபுதிரி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது, அடித்துப் பிடித்து. அதாவது அவர் மர்லின் மன்றோவின் மறுபிறவியாம். அதோடு விட்டாலும் பரவாயில்லை. தான், மைக்கேல் ஜான்சன் ஆவியுடன் திருமணம் செய்துகொண்டதாகவும் பரபரப்பு கிளப்பி இருக்கிறார்.

தன்னுடன் மைக்கேல் ஜாக்சன் பாலியல் உறவு கொள்ளவில்லை என்றும் தனது உடலை, நடனமாடுவதற்கும் பாடுவதற்கும் பயன்படுத்தியதாகவும் அவர் கூறியிருக்கிறார். இளஞ்சிவப்பு நிற நிச்சயதார்த்த மோதிரத்துடன் மைக்கேல் ஜாக்சன் தன்னிடம் காதலை முன் மொழிந்ததாகவும் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் தனது திருமணத்தை நடத்தி வைத்ததாகவும் மேலும் அதிர்ச்சி தருகிறார், அந்த ராபர்ட்ஸ்.

‘மைக்கேல் ஜாக்சன் எப்போதும் என்னுடனேயே இருக்கிறார். என்னிடம் அதிகமாக பேசிக்கொண்டிருக்கிறார். டிவியில் நான் பார்த்த, வெட்கப்படுகிற மனிதரா இவர் என ஆச்சரியப்படுகிறேன் . அவருக்கு அதிகமாக குக்கீஸ்தான் பிடிக்கிறது, அவர் என்னை நன்றாக நடத்துகிறார். அவரை நான் தொடுவதை அவர் விரும்பவில்லை. அவர் சிறப்பான வர். எனது தவறுகளை சுட்டிக்காட்டுகிறார். இதை அவர் தனது தந்தையிடம் இருந்து பெற்றிருக்கலாம். நான் ஜாக்சனை அதிகம் நேசிக்கிறேன். அதனால் நான் நானாக இல்லை’ என்று கூலாக கூறுகிறார் ராபர்ட்ஸ்.

 

 

Advertisement:
SHARE

Related posts

லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வரும் திட்டத்தை அரசு கைவிடவேண்டும்: எடப்பாடி பழனிசாமி

Gayathri Venkatesan

கொரோனாவால் இறந்தவர்களை தொடாமல் மதசடங்கு நடத்தலாம்!

தமிழ்நாட்டிற்கு 3.5 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கியது மத்திய அரசு

Ezhilarasan