முக்கியச் செய்திகள் தமிழகம்

கோடநாடு வழக்கு விசாரணை ஜன.28-க்கு ஒத்திவைப்பு

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை, ஜனவரி 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கும்பல் உள்ளே நுழைந்தது. அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து விட்டு பங்களாவில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து தப்பி சென்றது.
இவ்வழக்கில் கேரளாவை சேர்ந்த சயான் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டாக நடந்து வருகிறது. இந்த வழக்கின் கூடுதல் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இவ்வழக்கின் திடீர் திருப்பமாக கடந்த அக்டோபர் 25ம் தேதி சேலம் கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது, சாட்சிகளை கலைத்தல், சாட்சிகளை அழித்தல், தடயங்களை அளித்தல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கூடலூர் கிளை சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் கனகராஜ், சாஜகான் ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில், சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆஜராகினர்.

வழக்கு விசாரணைக்கு பின் அரசு வழக்கறிஞர் ஷாஜகான் செய்தியாளர்களிடம் கூறுகையில், வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும் வாளையார் மனோஜ் தற்போது நிபந்தனை ஜாமீனில் தளர்வுகள் அளிக்க வேண்டும் என
மனு அளித்துள்ளதாகவும் அதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த, வழக்கில் கூடுதல் சாட்சிகளிடம் விசாரணை நடத்த அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கை ஜனவரி 28 க்கு தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கடவுள் யார் தவறு செய்தாலும் தண்டனை கொடுப்பார்: இபிஎஸ்

EZHILARASAN D

சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு “நல் ஆளுமை” விருது!

Arivazhagan Chinnasamy

அஸ்ட்ராஜென்கா தடுப்பூசியை நிறுத்திக்கொண்ட ஐரோப்பிய நாடுகள்!

Halley Karthik