நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 17.94 சதவீதம் கொரோனா தொற்று விகிதம் உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 20 லட்சத்து 18 ஆயிரத்தி 825 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில், மூன்று லட்சத்து 47 ஆயிரத்து 254 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி, ஒரே நாளில், 703 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 761 ஆக
அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 777 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய
சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் 9 ஆயிரத்து 692 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.