ஐபிஎல்: கொல்கத்தாவை இன்று எதிர்கொள்கிறது சிஎஸ்கே

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,…

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை ஒன்பது போட்டிகளில் விளையாடி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கும் சென்னையில் அணியில் ருதுராஜ், டுபிளிசிஸ், அம்பத்தி ராயுடு, மொயின் அலி, ரெய்னா, தோனி என வலுவான பேட்டிங் வரிசை இருக்கிறது. போதாகுறைக்கு ஜடேஜா, ஷர்துல், தீபக் சாஹர், பிராவோ ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுபவர்கள் என்பதால் அந்த அணி கெத்தாக இருக்கிறது. இன்றைய போட்டியில் சென்னை வெற்றிபெற்றால் பிளே ஆப் சுற்றை சென்னை அணி உறுதி செய்ய வாய்ப்பிருக்கிறது.

கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் 4 வது இடத்தில் இருக்கிறது. அந்த அணியில் புதிய தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியுள்ள வெங்கடேஷ் ஐயர், பந்துவீச்சாளர்களை மிரட்டி வருகிறார். திரிபாதி, ரஸல், தினேஷ் கார்த்திக், கேப்டன் மோர்கன், சுழல் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன் ஆகியோரும் சிறப்பான ஃபார்மில் இருப்பதால், அந்த அணியும் வலுவாகவே இருக்கிறது.

இதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. மற்றொரு போட்டியில் விராத் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ரோகித் சர்மா தலையிலான மும்பை அணியும் மோதுகின்றன.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.