டி.என்.பி.எல் 5வது சீசன் இன்று தொடக்கம்

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 5வது சீசன் சென்னையில் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் போட்டி 2016 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 4 போட்டிகள்…

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 5வது சீசன் சென்னையில் இன்று தொடங்குகிறது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் போட்டி 2016 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 4 போட்டிகள் நடைபெற்றுள்ளன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2 முறையும் டி.என்.பி.எல் கோப்பையை கைப்பற்றி உள்ளது. டூட்டி பேட்ரியாட்ஸ் (2016), மதுரை பாந்தர்ஸ் (2018) ஆகிய அணிகள் தலா ஒரு தடவை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது.

5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் பார்வையிட அனுமதி இல்லை. 8 அணிகள் மோதும் இத்தொடரின் இறுதிப்போட்டி அடுத்த மாதம் 15-ம் தேதி நடைபெறவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.