தமிழ்நாட்டில் புதிதாக 1,179 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 1,179 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 156 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது.…

தமிழ்நாட்டில் புதிதாக 1,179 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 156 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,89,463 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 16 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,928 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றிலிருந்து ஒரே நாளில் 1,407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,39,209 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் தற்போது 14,326 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்களைப் பொறுத்தவரை, சென்னை மற்றும் கோவையில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 156 பேருக்கு தொற்றுப் பாதித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 159 பேர் குணமடைந்து மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

கோயமுத்தூரில் 127 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் 100-க்கும் குறைவானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
…………

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.