ஆபரணத்தங்கம் விலை அதிகரிப்பு

தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 28 ரூபாய் அதிகரித்து, 4 ஆயிரத்து 484 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா காரணமாக தொழில்துறை தேக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, தங்கத்தில் செய்யும் முதலீடு அதிகரிக்கத் தொடங்கியது. இதனால்…

தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 28 ரூபாய் அதிகரித்து, 4 ஆயிரத்து 484 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா காரணமாக தொழில்துறை தேக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, தங்கத்தில் செய்யும் முதலீடு அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை உயர்ந்து வந்தது. இந்நிலையில், சென்னையில் ஆபரணச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று உயர்ந்து காணப்பட்டது.

22 கேரட் ஆபரணத்தங்கம், கிராம் ஒன்றுக்கு 28 ரூபாய் அதிகரித்து, 4 ஆயிரத்து 484 ரூபாயாகவும், சவரன் ஒன்றுக்கு 224 ரூபாய் அதிகரித்து, 35 ஆயிரத்து 872 ரூபாயாகவும் காணப்பட்டது.

வெள்ளி கிராம் ஒன்றுக்கு 90 காசுகள் உயர்ந்து, 68 ரூபாய் 60 காசுகளாகவும் , ஒரு கிலோ வெள்ளியின் விலை 68 ஆயிரத்து 600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.