முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தமிழ்நாட்டில் புதிதாக 1,542 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,542 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 889 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,542 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனாவால் 26 லட்சத்து 8 ஆயிரத்து 748 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 793 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25 லட்சத்து 56 ஆயிரத்து 116 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 21 பேர் உயிரிழந்துள் ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 835 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 162 பேருக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 208 பேர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள் ளனர். கோவையில் சென்னையை விட தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 231 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 122 பேருக்கு புதிதாகத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

புலி தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி

Gayathri Venkatesan

வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலி உயிரிழப்பு

Gayathri Venkatesan

யூடியூப்பர் மதன் கைது; சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை

Halley karthi