முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

ராஜ டரியலுடன் மீண்டும் தொடங்குமா? புலிகேசி விவகாரத்தில் சமரசம்

வடிவேலுவின் ‘இம்சை அரசன் 24.ம் புலிகேசி’பட விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டு விட்டதாக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கிய ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து, அதன் 2 ஆம் பாகத்தை உருவாக்க முடிவு செய்தனர். அதன்படி  வடிவேலு  ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். சிம்புதேவன் இயக்கத்தில் படப்பிடிப்புத் தொடங்கியது. ‘இம்சை அரசன் 24.ம் புலிகேசி’ என்று டைட்டில் வைக்கப்பட்டு ஷூட்டிங் தொடங்கப்பட்ட நிலையில், வடிவேலுவுடன் படக்குழுவுக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

இதனால் வடி வேலு படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. படத்துக்காகப் போடப்பட்ட பல கோடி செட் வீணானது. வடிவேலுவால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி, இந்தப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடிகர் வடிவேலுவுக்கு ரெட் போடப்பட்டது. இதனால் வடிவேலுவால் பிற படங்களில் நடிக்க முடியாமல் போனது. இந்தப் பிரச்னை குறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள எஸ்.பிக்சர்ஸ் ஷங்கர், 24.ம் புலிகேசி திரைப்படத்தில் நடித்த, நடிகர் வடிவேல் மீது புகார் அளித்திருந்தார். அந்தப் புகார் சம்பந்தமாக, தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் வடிவேலு மற்றும் எஸ்.பிக் சர்ஸ் நிறுவனத்தை நேரில் அழைத்து பேசி மேற்கண்ட பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு காணப்பட்டுள்ளது’என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ராஜ டரியலுடன் ‘இம்சை அரசன் 24.ம் புலிகேசி’ படம் தொடங்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், ’அந்தப் படம் மீண்டும் தொடங்குமா என்பது தெரியாது. வடிவேலு இனி மற்றப் படங்களில் நடிக்கலாம் என தயாரிப்பாளர் சங்கம் அனுமதி அளித்துள்ளது’ என்கின்றனர் சினிமா வட்டாரத்தில்.

Advertisement:
SHARE

Related posts

முதல் வெற்றியை பதிவு செய்தது டெல்லி!

Janani

விஷால், சுனேனா நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு

Halley Karthik

அமைச்சர் காமராஜ் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அறிக்கை!

Niruban Chakkaaravarthi