மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள்; தலைவர்கள் மரியாதை

மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தியின் உருவச்சிலைக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. நாடு முழுவதும் இன்று காந்தியின் 153வது பிறந்த நாள் விழா சிறப்பாக…

மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தியின் உருவச்சிலைக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

நாடு முழுவதும் இன்று காந்தியின் 153வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தியின் உருவச்சிலைக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, காந்தியின் சிலைக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள அவரின் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

அமைச்சர்கள் சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜன், மா சுப்பிரமணியன், காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் காந்தியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். இதே போல டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் பிரதமர் மோடி, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.