முக்கியச் செய்திகள் குற்றம்

எம்பி ரமேஷுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

முந்திரி தொழிலாளி கொலை வழக்கில் எம்பி ரமேஷிடம் விசாரணை நிறைவுற்றதையடுத்து, அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள எம்பி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த கோவிந்தராஜ் என்பவர் கடந்த 19ஆம் தேதி மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார், எம்பி ரமேஷ், அவரது உதவியாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களை விருத்தாசலம் கிளைச்சிறையில் அடைத்தனர். இதனிடையே வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடலூர் எம்பி ரமேஷ், பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்நிலையில் அவரிடம் இருநாட்கள் விசாரணை நடத்த சிபிசிஐடி கோரிக்கை விடுத்து இருந்த நிலையில், ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க கடலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் அனுமதியளித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து எம்பி சுரேஷிடம் போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் சிபிசிஐடி போலீசார், நீதிபதி முன் அவரை ஆஜர் படுத்தினர். நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷை வரும் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார்.

Advertisement:
SHARE

Related posts

அசுர வேகத்தில் பரவும் கொரோனா: ஹர்திக் பாண்டியாவின் எச்சரிக்கை ட்வீட்

Ezhilarasan

பழைய ஸ்கூல் பஸ்சை நடமாடும் வீடாக்கிய குடும்பம்!

Halley karthi

உதயநிதி ஸ்டாலின்: மக்களின் ‘நண்பேன்டா’