ராமநாதபுரத்தில் 144 தடை  – ஆட்சியர் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராடிய இம்மானுவேல் சேகரன் செப்டம்பர்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராடிய இம்மானுவேல் சேகரன் செப்டம்பர் 11ம் தேதி சுட்டு கொள்ளப்பட்டார். அவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட பரமகுடியில் ஆண்டு தோறும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 11 ம் தேதி நினைவு  தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது.
இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் அக்டோபர் 31 ம் தேதி தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 2 மாதங்களுக்கு அசம்பாவிதங்கள் எதும் நடக்காமல் இருக்கும் வண்ணம் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதனால் வெளிமாவட்டத்தை சேர்ந்த வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.