கடற்படையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்த தருமபுரியை சேர்ந்த முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்து அஞ்செட்டி அருகே உள்ள காமாட்சிபுரமத்தைச் சேர்ந்தவர் செவத்தான் மகன் மகன் ரங்கன். வெண்ணாம்பட்டி தேவராஜ் தெருவை சேர்ந்த பழனி (52). முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரான இவர் ரங்கனுக்கு கடற்படையில் வேலை வாங்கி தருவதாக கூறி 2020-ம் ஆண்டு ரூ.13 லட்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
ஆனால் அவர் கூறியபடி வேலை வாங்கி கொடுக்கததால் செவத்தான் பணத்தை திரும்ப தருமாறு பழனியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். தொடர்ந்து பணத்தை கேட்டதால் பழனி, செவத்தானுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக செவத்தான் அஞ்செட்டி போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விசாரணையில் பழனி வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றி மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் பழனியை கைது செய்தனர்.
—-அனகா காளமேகன்