மின்வாரியத்திற்கு மாதம் ஒன்றுக்கு கடந்த ஆட்சியில் ரூ.7 கோடி வருமானம் வந்த நிலையில், தற்போது மாதத்திற்கு ரூ.13 கோடி வருமானம் வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தலைமைச்செயலக வளாகத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் துணை மின் நிலையத்தில் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண் இணைப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முகாமை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 2.66 கோடி மின் நுகர்வோரில் 11 மணி நிலவரப்படி 1.03 கோடி பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என்றார்.
மேலும், ஆதார் எண் இணைப்பு பணிக்கு கூடுதலாக முகாம்கள் நடத்த தயாராக இருக்கிறோம். டிசம்பர் 31 ஆம் தேதி பார்த்துவிட்டு, முதலமைச்சருடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட அறிவிப்பு வெளியிடப்படும். சிலபேரின் எதிர்பார்ப்புகளை விட மிக நேர்த்தியாக ஆதார் எண் இணைப்பு நடைபெறுகின்றது என பேசினார்.
அத்துடன், மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்திற்கு ஏற்கனவே பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்திற்கு மாதத்திற்கு ரூ.13 கோடி வருமானம் வருகிறது, கடந்த ஆட்சியில் ரூ.7 கோடி தான் வருமானம் வந்தது என்றார்.
மேலும், இயக்கத்தின் வெற்றிக்காக சிறப்பாக வழிநடத்தியவர் உதயநிதி. அமைச்சர்களுக் கெல்லாம் முன்னுதாரணமாக செயல்படுவார். முதல் நிகழ்வாக மின்சாரத்துறையின் நிகழ்ச்சியில் உதயநிதி பங்கேற்றது மகிழ்ச்சி எனவும் அவர் தெரிவித்தார்.