11வது உலகத் தமிழ் மாநாடு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

சார்ஜாவில் நடைபெறவுள்ள 11வது உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்களின் முயற்சியால் டெல்லியில் 1964 இல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் உருவானது. உலகத்…

சார்ஜாவில் நடைபெறவுள்ள 11வது உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்களின் முயற்சியால் டெல்லியில் 1964 இல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் உருவானது. உலகத் தமிழறிஞர்களை ஒன்றிணைத்து அவர்களது ஆராய்ச்சிகளை உலகறியச் செய்யும் வகையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்தவும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கிய போது திட்டமிடப்பட்டு, உலகத்தமிழ் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது.

அதன்படி உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தால் இதுவரை 10 மாநாடுகள் நடத்தப்பட்டு உள்ளது. 10வது உலக தமிழ் மாநாடு அமெரிக்காவில் நடைபெற்றது. அதன்பிறகு கொரோனா பரவல் காரணமாக 11வது உலக தமிழ் மாநாடு நடைபெறுவதில் சிக்கல் ஏற்ப்பட்டது.

இதையடுத்து 11வது உலகத்தமிழ் மாநாடு ஜூலையில் சார்ஜாவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 3 நாட்கள் நடைபெறவுள்ள மாநாட்டில் 100 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,500 தமிழறிஞர்கள், இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

 

சுமார் ரூ.25 கோடி செலவில் நடைபெறவுள்ள மாநாட்டில், கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களும் பங்கேற்கும் உலகத்தமிழ் மாநாட்டில் சார்ஜா அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கவுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.