முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

லக்னோவில் கட்டிடம் இடிந்து விபத்து: முன்னாள் காங்கிரஸ் தலைவரின் அம்மா, எழுத்தாளரின் மகள் உட்பட 3 பேர் பலி!

உத்தரபிரதேசம் லக்னோவில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்ததுள்ளதாகவும்,16 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள வாசிர் ஹசன்கஞ்ச் சாலையில் நேற்று மாலை 7 மணியளவில் நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (எஸ்.டி.ஆர்.எஃப்) ஆகியவற்றுடன் இந்திய ராணுவக் குழுவும் ஆகியவை வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தொடங்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த மீட்பு பணியில் இதுவரை 16 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 03 உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இடிபாடுகளுக்கு அடியில் இருந்து இன்று காலை மீட்கப்பட்ட ஹைதர் மற்றும் உஸ்மா ஆகிய இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருவரும் சிகிச்சை பலனின்றி அங்கு உயிழந்தனர். உயிரிழந்த 72 வயதான பேகம் ஹைதர்,முன்னாள் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜிஷான் ஹைதரின் தாயார் என்று சொல்லப்படுகிறது. உஸ்மா மூத்த பத்திரிகையாளர் ஒருவரின் மகள் என்று கூறப்படுகிறது. மீதமுள்ளவர்களையும் தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹைதர் மற்றும் உஸ்மா உட்பட இதுவரை மீட்கப்பட்ட 16 பேரை தவிர, மீதமுள்ளவர்களையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மீட்பு பணிகள் நடைபெறும் இடத்தில் இருந்து செய்தியாளர்களிடம் பேசிய உத்தரபிரதேச டிஜிபி டிஎஸ் சவுகான் கூறுகையில், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றுடன் இந்திய ராணுவக் குழுவும் வரவழைக்கப்பட்டு எந்தவித உயிர்சேதமும் ஏற்பட்டுவிடாதபடி மிகவும் அறிவியல் பூர்வமாக மீட்பு பணிகள் தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதுவரை 16 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 03 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

மீட்பு பணியை தொடங்குவதற்கு முன்பாக 30-ல் இருந்து 35 பேர் வரை இந்த இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அனுமானித்தோம். இதுவரை மீட்கப்பட்டவர்கள் தவிர இன்னும் 5 -ல் இருந்து 7 பேர் வரை உள்ளே இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களையும் பத்திரமாக மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்திற்கான காரணங்கள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை.கட்டிடத்தின் வாகன நிறுத்துமிடத்தில் சில கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, ஆனால் யார் காரணம் என்று கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை” எடுக்கப்படும் என்று சவுகான் கூறினார். தற்போது மீட்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்த்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் இன்னொரு கோணத்தில் பார்க்கும் போது செவ்வாய்கிழமையான நேற்று மதியம் 2.28 மணியளவில் நேபாளத்தைத் மற்றும் அதன் மைய பகுதியில் தாக்கிய 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் காரணமாக லக்னோ மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தது.

அதனால் இதன் முதல் பார்வையில் “இது ஒரு இயற்கை பேரழிவாகத் கூட இருக்கலாம் என்று தோணர்கிறது. ஏனென்றால் இந்த கட்டிடமானது கோமதி நதி ஆற்றங்கரையின் அருகில் இருப்பதால், அந்த 5.8 நிலநடுக்கம் இங்கும் உணரப்பட்டு, இதுமாதிரியான சம்பவத்தை ஏற்படுத்தியிருக்கலாம்,” என்று சவுகான் கூறினார்.

இவரைத்தொடர்ந்து உத்திர பிரதேச மாநிலம் லக்னோ நகர் ஆணையர் ரோஷன் ஜேக்கப் கூறுகையில், இந்த கட்டிடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது. தற்போது நாங்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். ஆனால், இந்த கட்டிடத்தை கட்டிய பில்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் ரோஷன் ஜேக்கப் கூறியுள்ளார்.

இந்த நிலையில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனைகள் விழிப்புடன் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் லக்னோ கோட்ட ரோஷன் ஜேக்கப், கூடுதல் போலீஸ் கமிஷனர் பியூஷ் மோர்டியா, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவையும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைத்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களை அனுமதிக்கப்பட்டிருந்த ஹஸ்ரத்கஞ்சில் உள்ள ஷ்யாமா பிரசாத் முகர்ஜி மருத்துவமனைக்கு , துணை முதல்வர் பிரஜேஷ் பதக் நேரில் சென்று காயமடைந்தவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார்.மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், உத்தரபிரதேச அரசின் மேற்பார்வையில் மாவட்ட நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகக் தெரிவித்துள்ளார்.

பி.ஜேம்ஸ் லிசா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளபெருக்கு,முகாம்களில் தங்கும் கரையோர மக்கள்

Web Editor

தமிழக கடற்பகுதியில் இன்று காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

Web Editor

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Gayathri Venkatesan