முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழா – தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழாவையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மதுரை கீழவெளி வீதி-மேலவெளி வீதி சந்திப்பு நெல்பேட்டை பகுதியில் உள்ள அண்ணாவின் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற நிலையில், அங்குவைத்தே அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதேபோல், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் அனைத்து அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனிடையே, கனிமொழி எம்.பி. தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழர் நலன் காக்க, இன மானம் காக்க இங்கு உதித்த புரட்சி சூரியன் பேரறிஞர் அண்ணா என்றும் ஒன்றியத்தில் தேங்கும் அதிகாரங்களை உடைத்து மக்களுக்கான அரசை உருவாக்கும் தத்துவத்தைக் கற்பித்த மேதையின் பிறந்தநாள் இன்று என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் கைகாட்டிய திசையில் நம் உரிமைக்கானப் போராட்டத்தைத் தொடர்வோம் என அவர் பதிவிட்டுள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகங்களை கலைக்கப் போவதில்லை: தமிழ்நாடு அரசு

EZHILARASAN D

அதிமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்பு ; எச்சரிக்கிறார் தராசு ஷ்யாம்

Web Editor

‘அன்னய்யா பாலு பாடுவதற்கென்றே ஆயுளைத் தந்தவர்’: கமல்ஹாசன்

EZHILARASAN D