இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 1,000 –வது குடமுழுக்கு மேற்கு மாம்பலம் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் நடைபெறும் 1,000 –வது குடமுழுக்கு விழா
மேற்கு மாம்பலம் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று குடமுழுக்கு விழாவை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு கலச புறப்பாடும், 7.30 மணிக்கு அனைத்து கோபுரங்கள் மற்றும் இராஜகோபுரத்திற்கு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதில் கௌமார மடம், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள். திருக்கயிலாய பரம்பரை வேளக்குறிச்சி ஆதீனம் சீர்வளர்சீர் சத்ய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், சிவநெறிச் செம்மல் கே.பிச்சை குருக்கள், சிவபுரம் கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார், பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சிவாச்சாரியார் செல்வ சுப்பிரமணிய குருக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







