முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் நாளை 1000 சிறப்பு காய்ச்சல் முகாம்கள்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாடு முழுவதும் நாளை 1000 சிறப்பு காய்ச்சல் முகாம்களும், சென்னையில் மட்டும் 100 முகாம் நடைபெற உள்ளது என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் இருதய நோய் வல்லுனர்கள் உடனான ஆய்வு கூட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “இன்று இருதய நோய் மருத்துவர் மற்றும் வல்லுனர்கள் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிகிச்சை பெறுபவர்கள் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2009 ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை 1,19,10,653 பயனாளிகள் 10,835 கோடி ரூபாய் காப்பீட்டு தொகையின் மூலம் பயனடைந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ஜனவரி முதல் 1166 நபர்கள் H1N1நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 371 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 15 நபர்கள் மட்டுமே அரசு மருத்துவ மருத்துவமனையில் உள்ளனர். மீதம் உள்ளவர்கள் தனியார் மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 10 மாதங்களில் 10 நபர்கள் இந்த நோயால் இறந்துள்ளனர். தமிழக முழுவதும் 11,333 இடங்களில் மருத்துவம் பார்க்கவும் மருந்துகள் வழங்கியும் வருகின்றனர்.
இருப்பினும் நாளை தமிழ்நாடு முழுவதும் 1000 சிறப்பு காய்ச்சல் முகாம்களும், நடைபெற உள்ளது. சளி மற்றும் உடல்நிலை சரி இல்லை என்றால் அங்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம். நாளை சென்னையில் மட்டும் 100 இடங்களில் இந்த காய்ச்சல் முகாம் நடைபெறுகிறது.

இந்த காய்ச்சல் முகாம்களுக்கு தமிழகத்தில் 476 நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஈடுபடுவார்கள். 3 நபர்களுக்கு மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் அந்த இடத்தில் இந்த முகாம் தொடர்ந்து நடைபெறும் எனக் கூறிய அமைச்சர் கொரோனா கட்டுக்குள் உள்ளது என்றும் கூறினார்.

 

-பரசுராமன்.ப 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னை அருகே பிரமாண்ட விளையாட்டு நகரம்

EZHILARASAN D

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 3-ம் ஆண்டு நினைவு தினம்!

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா- தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் பாராட்டு

Web Editor