முக்கியச் செய்திகள் தமிழகம்

1,000 சிலம்ப வீரர்கள் 2 லட்சம் முறை சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்வு

1,000 சிலம்ப வீரர்கள் 2 லட்சம் முறை சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்வை பாஜக நடத்தியுள்ளது.

கேல் இந்தியா திட்டத்தில் சிலம்பாட்டத்தை இணைத்ததற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி கூறும் விதமாக 1,000 சிலம்ப வீரர்கள் 2 லட்சம் முறை சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்வை பாஜக நடத்தி வருகிறது.

பாஜக இளைஞர் & விளையாட்டுப் பிரிவுடன் சிலம்பாட்ட கூட்டமைப்பு இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியை சென்னை அயனாவரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடக்கி வைத்தார். நிகழ்வில் பாஜக இளைஞர் & விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர்பிரசாத், மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன், கனல் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதில் 100 சிலம்பாட்ட ஆசான்கள் வழிநடத்த, 1000 சிலம்பாட்ட வீரர்கள் 2 லட்சம் முறை சிலம்பம் சுற்றுகின்றனர். நிகழ்வை துவக்கி வைத்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கொட்டும் மழையிலும் ஒரு துளி மழைநீர் கூட தன் மேல் படாமல் சிலம்பம் சுற்றுவதே சாதனை என்று குறிப்பிட்டார்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை, கேல் இந்தியா திட்டத்தில் இணைத்திருப்பது பாஜகவின் முயற்சியால்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கான தடை ரத்து

Halley karthi

ம.பி.யில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார் எல்.முருகன்

Ezhilarasan

மத்திய அரசுக்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சி தலைவர்கள் பேரணி

Ezhilarasan