முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா செய்திகள்

ஒரே நாளில் 1000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்: ரயில்வே தகவல்!

ஒரே நாளில் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் 1000 மெட்ரிக் டன்-னுக்கு மேலாக ஆக்சிஜன் இறக்கப் பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இதுவரை 175 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் 675 டேங்கர்களில் 13 மாநிலங்களுக்கு 11,030 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அதில் குறிப்பாக நேற்று ஒரு நாளில் மட்டும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில்கள் மூலம் 1000 மெட்ரிக் டன்-னுக்கு மேலாக ஆக்சிஜன் நாடுமுழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மகாராஷ்டிராவில் 521 மெட்ரிக் டன் ஆக்சிஜனும், உத்தர பிரதேசத்தில் 2858 மெட்ரிக் டன் ஆக்சிஜனும் இறக்கப்பட்டுள்ளது, அதேபோல மத்திய பிரதேசத்தில் 476 மெட்ரிக் டன், ஹரியானாவில் 1427 மெட்ரிக் டன், ராஜஸ்தானில் 40 மெட்ரிக் டன், டெல்லியில் 3794 மெட்ரிக் டன், கர்நாடகாவில் 480 மெட்ரிக் டன், உத்தரகண்டில் 200 மெட்ரிக் டன், தமிழகத்தில் 350 மெட்ரிக் டன், கேரளாவில் 118 மெட்ரிக் டன், பஞ்சாப்பில் 81 மெட்ரிக் டன்,
தெலங்கானாவில் 565 மெட்ரிக் டன் ஆக்சிஜன், ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு இறக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதலை பெறுவதில் தாமதமா? மா.சுப்பிரமணியன் பதில்

Ezhilarasan

தொடங்கியது ஆபரேஷன் பாகுபலி: அதிரடி தேடுதலில் 6 குழுக்கள்

Gayathri Venkatesan

பேருந்தில் எச்சில் தொட்டு டிக்கெட்- நடத்துநருக்கு கொரோனா டெஸ்ட்

Ezhilarasan