முக்கியச் செய்திகள் சினிமா

பிரபல நடிகருக்கு தோள்பட்டை அறுவைச் சிகிச்சை

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு தோள்பட்டை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா. ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமராவின் மகனான இவர், அங்கு முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் இப்போது அகண்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரக்யா ஜெய்ஸ்வால் ஹீரோயினாக நடிக்கிறார். போயபதி ஸ்ரீனு இயக்குகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நடிகர் பாலகிருஷ்ணா கடந்த சில மாதங்களாக தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதற்காக அவர் கடந்த 31 ஆம் தேதி ஐதராபாத் பஞ்ச்ரா ஹில்ஸில் உள்ள கேர் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆறுமணி நேர சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ’தோள்பட்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ரகுவீர் ரெட்டி, டாக்டர் பி.என்.பிரசாத் ஆகியோர் நான்கு மணி நேரமாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். தோள்பட்டை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது என்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இன்னும் 6 வாரத்துக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram