ரூ.6 கோடியில் கூடுவாஞ்சேரி ஏரி புனரமைப்பு பணி! அமைச்சர் தா.மோ அன்பரசன் துவக்கி வைத்தார்!

ரூ.6 கோடியில் கூடுவாஞ்சேரி ஏரி புனரமைக்கும் பணியை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறை அமைச்சர் தா. மோ அன்பரசன் துவங்கி வைத்தார்.  செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நீர் வளத்துறையின் பராமரிப்பில்…

ரூ.6 கோடியில் கூடுவாஞ்சேரி ஏரி புனரமைக்கும் பணியை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறை அமைச்சர் தா. மோ அன்பரசன் துவங்கி வைத்தார். 

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நீர் வளத்துறையின் பராமரிப்பில் உள்ள கூடுவாஞ்சேரி ஏரிக்கு பொத்தேரி , வல்லாஞ்சேரி, மற்றும் தைலாபுரம் ஆகிய ஏரிகள் உபரி நீராக வருகின்றன. மேலும் சுற்றுப்புற பகுதி மழை நீரும் ஆதாரமாக விளங்குகின்றது.

இந்நிலையில் 6.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏரியின் கொள்ளளவை உயர்த்தி அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.  இந்த பணியை சிறு, குறு மற்றும் நடுத்தர துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் துவங்கி வைத்தார். 

—கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.