திருவாரூர் மாவட்டத்தில் 10 போலி மருத்துவர்கள் கைது!

திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 10 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம், பல்வேறு இடங்களில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் ஊசி போடுவது என போலி மருத்துவர்கள் செயல்பட்டு…

திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 10 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம், பல்வேறு இடங்களில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் ஊசி போடுவது என போலி மருத்துவர்கள் செயல்பட்டு வந்தனர். இந்த நபர்களை கைது செய்ய திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார். இதனால், தனிப்படை காவல்துறையினர் மாவட்டம்
முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் , 10-க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்களை கைது செய்தார்கள். அதன்படி மாவட்டம் முழுவதும் செந்தில் , சிவகுமார் , மாரியப்பன், கல்யாண, சுந்தரம், ராஜேந்திரன், சிவகுருநாதன், சிவசுப்பிரமணியன், சவுரிராஜ், குமார் மற்றும் துரைராஜ் உள்ளிட்ட 10 போலி மருத்துவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டார்கள்.

—கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.